close
Choose your channels

கெட்டப் மாறும் அஜித், வெளிநாட்டுக்கு பறக்கும் படக்குழு: 'ஏகே 61' படத்தின் சூப்பர் அப்டேட்!

Tuesday, August 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

’ஏகே 61’ படக்குழு அடுத்தகட்டமாக பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக செப்டம்பர் 2ஆம் தேதி அஜித் உள்பட படக்குழுவினர் பாங்காக் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாங்காக்கில் 21 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பின்போது அஜித்தின் நீண்ட தாடி உள்ள கெட்டப் மாற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் இறுதியில் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய்யின் ’வாரிசு’ வெளியாகும் பொங்கல் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அஜித், மஞ்சுவாரியர், வீரா உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.