close
Choose your channels

'வலிமை' வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்டதா? போனிகபூர் தகவல்

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் ’வலிமை’ வாலி திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது இரண்டு வாரங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் உலக அளவில் ரூபாய் 200 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை உறுதி செய்துள்ள தயாரிப்பாளர் போனிகபூர் வலிமை திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய இருப்பதாக கூறியுள்ளார். அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படம் திரைப்படமும் ரூ. 200 கோடி வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில் ’வலிமை’ திரைப்படமும் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’வலிமை’ திரைப்படத்திற்கு பல திரைப்பட விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதிலும் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்ததால் ரூபாய் 200 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அஜித், எச் வினோத், போனிகபூர் மீண்டும் இணையும் ’அஜித் 61’ திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.