close
Choose your channels

'வலிமை' அப்டேட் குறித்த செண்டிமெண்ட் தகவல்!

Friday, March 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித்தின் படங்கள் அனைத்தும் கிட்டதட்ட வியாழக்கிழமை செண்டிமெண்டில் தான் வெளிவரும் என்ற நிலையில் விரைவில் ஒரு வியாழக்கிழமையில் ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் அதற்கு முந்தைய வியாழக்கிழமை ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிகள் மட்டும் வெளிநாட்டில் படமாக்க பட வேண்டி இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பிற்காக படக்குழு அடுத்த மாதம் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தெரிகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.