close
Choose your channels

மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் நாயகி!

Saturday, May 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வரலாறு’ என்ற திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவர் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த ’வரலாறு’ என்ற திரைப்படத்தில் அசின், கனிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர். இவர்களில் கனிகா பிரபல மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிறந்த ஆரோக்கியம் நிறைந்த இன்னொரு அற்புதமான ஆண்டாம இந்த ஆண்டு அமையும் என நான் உங்களுக்கு வாழ்த்துகிறேன். உங்கள அபாரமான உழைப்பின் காரணமாக மேஜிக்கல் படைப்புகளை கொடுத்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். கனிகாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.