close
Choose your channels

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வைரல் புகைப்படம்..!

Monday, February 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் கடும் குளிரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் தகவல்கள் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் நடித்த அபிராமி வெங்கடாச்சலம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிராமி வெங்கடாசலம் தனது சமூக வலைதளத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, காஷ்மீரில் தற்போதைய படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’, மாதவனின் ‘தி ராக்க்ட்டரி’, உள்பட சில படங்களில் நடித்த அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos