close
Choose your channels

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை: வைரல் வீடியோ!

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ’உன்னைத்தேடி’ என்ற திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பின்னர் அஜித் நடித்த ’ஆனந்த பூங்காற்றே’ சேரன் இயக்கிய ’வெற்றி கொடி கட்டு’ சூர்யா நடித்த ’பேரழகன்’, சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டு பயலே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’கோல்மால்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை மாளவிகாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவியா வேற லெவல் ஒரு வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு சில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.