close
Choose your channels

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாகும் அஜித்தின் ரீல் மகள்!

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த படத்தில் அஜீத் படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இவர் அஜீத் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் 7வது படத்தில் அனிகா நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.