close
Choose your channels

சென்னை திரும்பினார் அஜித்.. 'ஏகே 62' அறிவிப்பு எப்போது?

Wednesday, February 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பை தயாரிப்பை நிறுவனமான லைகா விரைவில் வெளியிடும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜீத் கடந்த சில நாட்களாக மனைவியுடன் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு சென்றிருந்த நிலையில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல் ஆகின. இந்த நிலையில் தற்போது அஜித் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் அஜித் உடன் அவரது ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜித் சென்னை திரும்பியதை அடுத்து அவர் நடிக்க இருக்கும் 62வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் நீண்ட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.