close
Choose your channels

தந்தை இறுதிச்சடங்கிற்கு முன் காலில் விழுந்து நன்றி தெரிவித்த அஜித்.. யார் தெரியுமா?

Saturday, March 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் தந்தை நேற்று காலமான நிலையில் அவர் ஒரு முக்கிய நபரின் காலில் விழுந்த பின்னரே இறுதிச் சடங்கை செய்தார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் தந்தை கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் உதயநிதி உள்பட பலர் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் அஜித்தின் தந்தை இறுதிச்சடங்கு நேற்று பெசன்ட் நகர் இடுகாட்டில் நடந்த நிலையில் அவர் தந்தையின் இறுதி சடங்கிற்கு முன்னர் ஒருவரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்ததாக கூறப்பட்டது. அவர் தான் அஜித் தந்தையை கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் என்று கூறப்படுகிறது. தனது தந்தைக்கு இத்தனை ஆண்டுகள் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நன்றி கூறிய பின்னரே அஜித் தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல அஜித் தனது தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுத்த அனைத்து காவல்துறையினருக்கும் தனது நன்றியை தெரிவித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.