close
Choose your channels

'வலிமை' பாணியில் 'அஜித் 61' படத்தின் அறிவிப்பு: ரசிகர்கள் குஷி!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் பாணியிலேயே அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ படத்தின் அறிவிப்பு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் ’வலிமை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இருவரும் இணையும் மூன்றாவது படம் தான் 'அஜித் 61’ என்பது குறிப்பிடத்தக்கது. போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இதற்காக ஐதராபாத்தில் சென்னை அண்ணாசாலை செட் போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் பூஜை அன்றே அந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று ’அஜித் 61’ படத்தின் பூஜை தினத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் விரைவில் ’அஜித் 61’ படத்தின் அப்டேட் வந்துவிடும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த தகவல்களும் பூஜையன்றே வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos