close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிருத்!

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதையும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'சங்கத்தமிழன்' படத்தின் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. விவேக் மெர்வின் கம்போஸ் செய்த 'சண்டக்காரி, நீ என் சண்டக்கோழி' என்று தொடங்கும் இந்த பாடல் ஒரு குத்துப்பாடல் என்றும், இந்த பாடலுக்கு விஜய்சேதுபதி மற்றும் நிவேதா பேத்ராஜ் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த பாடலை பிரான்சிஸ் என்பவர் எழுதியுள்ளார்.

ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடி தான்' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், அவர் நடித்த இன்னொரு திரைப்படமான 'சேதுபதி' படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.;

விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.