close
Choose your channels

அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் ரிலீஸ்: என்ன பட்டம் கொடுத்துருக்காங்க தெரியுமா?

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த கன்னட படம் ஒன்றான ’அரபி’ என்ற படத்தின் டீசர் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில தொழில்நுட்ப பணிகள் காரணமாக அந்த டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ’அரபி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் கே.எஸ்.விஸ்வாஸ் என்ற நீச்சல் வீரருக்கு பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் ’அரபி’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகிய நிலையில் இந்த டீசரிலும் ஒரு சில நொடிகள் மட்டுமே அண்ணாமலை நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் முதல் முறையாக வெள்ளித்திரையில் அண்ணாமலை தோன்றுகிறார் என்று டைட்டில் போடுவது மட்டுமின்றி அவருக்கு ‘சிங்கம்’ என்ற பட்டத்தை கொடுத்து ’சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ்’ என்று டைட்டிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.எஸ்.விஸ்வாஸ், அண்ணாமலை உள்பட பலரது நடிப்பில் உருவாக்கிய இந்த படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.