close
Choose your channels

அனுஷ்காவின் 'நிசப்தம்' படத்தில் சாக்சி!

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களுக்கு பின் அனுஷ்கா நடித்த 'பாகிமதி' என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. இந்த நிலையில் 'நிசப்தம்' என்ற திகில் மர்ம படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அனுஷ்காவின் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

நிசப்தம்' படத்தில் 'சாக்சி' என்ற கேரக்டரில் அனுஷ்கா நடித்திருப்பதாக சற்றுமுன் வெளியான போஸ்டர் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அனுஷ்கா, மாற்றுத்திறனாளி ஓவியராக நடித்திருப்பதாகவும் தெரிகிறது.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் அனுஷ்காவுடன் நீண்ட இடைவெளிக்கு பின் மாதவன் நடிக்கின்றார். இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு 'ரெண்டு' என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகூர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசை அமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.