close
Choose your channels

தமிழில் மட்டும் தாமதம் ஆகும் அனுஷ்கா படம்

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'பாகுபலி'க்கு இணையான படம் என கூறப்படும் அனுஷ்காவின் 'ருத்ரம்மாதேவி' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்டாலும், படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ருத்ரம்மாதேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் தயாராகியுள்ள நிலையில் வரும் 9ஆம் தேதி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் தமிழில் மட்டும் ஒருவாரம் கழித்து அதாவது வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், பிரம்மானந்தம், நித்யாமேனன், கேதரின் தெரசா, மற்றும் பலர் நடித்துள்ள 'ருத்ரம்மாதேவி' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு அஜயன் வின்செண்ட் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

'பாகுபலி'யை அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ருத்ரம்மாதேவி' அந்த படத்தை போலவே மாபெரும் வெற்றி பெருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.