close
Choose your channels

கொரோனா விடுமுறையில் அப்பாவின் பிறந்த நாளை கொண்டாடிய 'பாகுபலி' நடிகை

Tuesday, April 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா விடுமுறையில் சினிமா நட்சத்திரங்கள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருப்பதால் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிஸியாக இருந்த இருந்து வரும் ’பாகுபலி’ புகழ் நடிகை அனுஷ்காஷெட்டி, தற்போது கொரோனா விடுமுறையில் இருப்பதால் தனது தந்தையின் பிறந்த நாளை தாயாருடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடியுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த போது ’மிகவும் அழகான அன்பான உற்சாகமான தந்தையாகிய நீங்கள் எங்களுக்கு பல சிறந்த, நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். இன்று உங்கள் பிறந்த நாள். இன்றுபோல் எப்பொழுது நீங்கள் புன்னகையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ஏனென்றால் அது உங்களை மட்டுமின்றி எங்களையும் மகிழ்விக்கும். இனிய பிறந்தநாள் அப்பா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா விடுமுறையில் தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடி உள்ள அனுஷ்காவுக்கும் அவரது தந்தைக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதவனுடன் அனுஷ்கா நடித்த ’நிசப்தம்’ என்ற திரைப்படம் கொரோனா விடுமுறைக்குப் பின் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.