close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில்..

Monday, October 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தின் வெளிவர வாய்ப்பு உள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு என இருமொழிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான டைட்டில் வைக்கப்படும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'ஏஜெண்ட் சிவா' என்ற டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் காமெடி வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.