close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கார் நாயகன்

Monday, January 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பு திரைப்படமான படத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதுவரை அனிருத் மற்றும் டி.இமான் ஆகியோர் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் தற்போது முதன்முதலாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ரவிகுமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை ரவிகுமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்பட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.