close
Choose your channels

சச்சின் பிறந்த நாளுக்கு ரஹ்மான் கொடுத்த மறக்க முடியாத பரிசு

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கர் நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் வரும் மே மாதம் 26ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சச்சின் பிறந்த நாளை முன்னிட்டு 'சச்சின்' படத்தின் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பின்னர் சச்சினுக்கு அவர் கூறிய வாழ்த்து செய்தியில், 'இது சச்சின் படத்தின் முதல் பாடல். இந்த மண்ணின் தலைசிறந்த மகனுக்கு இதைப் பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

ரஹ்மானின் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட சச்சின் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'இந்த மண்ணில் பிறந்தது கடவுள் கொடுத்த வரம். உங்கள் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் இனி ஒலிக்கும்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் இரண்டு இளம் சாதனையாளர்கள் இணையும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.