close
Choose your channels

அன்பா வந்தா ஒளி கொடுப்போம், வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்: 'மெர்சல்' பாடல் விமர்சனம்

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் என்றால் ஒருமுறைக்கு நான்கு முறை கேட்ட பின்னரே ஹிட்டாகும். ஆனால் முதல்முறை கேட்டபொழுதே புல்லரிக்கும் வகையில் ஒரு பாடல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகியுள்ளது என்றால் அது சற்று முன் வெளியாகியுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தான். இதிலிருந்து ரஹ்மான் அவர்கள் மீண்டும் தன்னுடைய முந்தைய வெற்றி ஃபார்முக்கு வந்துவிட்டார் என்பது உறுதியாகிறது. தமிழ் மொழி மற்றும் தமிழரின் பெருமையை கூறும் வகையில் வேறு பாடல் சமீப காலத்தில் இதுபோல் வந்ததில்லை என்றே இந்த பாடலை கேட்கும் அனைவரும் ஒப்புக்கொள்வர்.
தளபதி விஜய்க்கு என்றே ரஹ்மான் ஸ்பெஷலாக அமைத்துள்ள இந்த பாடலின் வரிகள் ஒவ்வொரு தமிழனும் பரவசப்படும் வகையில் உள்ளது. குறிப்பாக 'அன்பா வந்தா ஒளி கொடுப்போம், வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்' என்ற வரிகள் தமிழனுக்கு மட்டுமே உள்ள பாரம்பரிய குணங்கள். மேலும் 'வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே' என்ற வரிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற வெற்றியை நினைவுபடுத்துகிறது.
'எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும், கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்' என்ற வரிகள் விஜய் திரையுலகை தாண்டி அடுத்த கட்டத்திற்கு வரவேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பதாக எடுத்து கொள்ளலாம்.
இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மட்டும் கொண்டாட வேண்டிய பாடல் இல்லை. ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனும் பாடி கொண்டாட வேண்டிய பாடல். இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் குறித்த எந்த விழாவாக இருந்தாலும் அதில் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலாக இருக்கும் வகையில் இந்த பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு தமிழர்கள் சார்பில் ஒரு மிகப்பெரிய நன்றி: இதோ இந்த பாடலின் முழு வரிகள்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன்மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
மாறாது எந்நாளும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.