close
Choose your channels

அருண்விஜய்யின் 'சினம்' சென்சார் தகவல்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் நடிப்பில் ஜிஎன் குமரவேலன் இயக்கிய ’சினம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் சமீபத்தில் ’சினம்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலானது என்பதும் டீசரில் இருந்த ‘தப்பை கண்டு ஒவ்வொருத்தருக்கும் கோபம் வர வேண்டும், அவ்வாறு கோபம் வந்தால் தான் தப்பு செய்றவன் பயப்படுவான், பயப்படனும்’ என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அருண்விஜய் ஏற்கனவே நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’ மற்றும் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருண்விஜய் 31’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் ஹரி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.