close
Choose your channels
evp_raaga
kappan_us

மீண்டும் அஜீத்துடன் மோதுகிறாரா அருண் விஜய்?

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இம்மாதம் 29ஆம் தேதி அவர் நடிக்கயிருக்கும் அடுத்த படமான 'தல 60' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது 

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க அருண் விஜய்யை படக்குழுவினர் அணுகியிருப்பதாகவும், அருண்விஜய்யும் பாசிட்டிவ் பதில் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் விரைவில்  உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் விக்டர் என்ற கேரக்டரில் அருண்விஜய் நடித்து இருந்தார் என்பதும், இந்த படத்திற்கு பின்னரே அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் அஜித்துடன் மீண்டும் மோதும்  வில்லன் கேரக்டரில் அருண் விஜய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் 'தல 60' திரைப்படம் ஒரு மோட்டார் பைக் ரேஸ் வீரரின் கதை என்றும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது என்பதும் அந்தப் படத்தில் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz