close
Choose your channels

நடிகர் அருண்விஜய் நடிக்கும் “யானை“ படத்தின் புது அப்டேட்!

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் தற்போது “யானை“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நடிகர் அருண்விஜய் நேற்று டப்பிங்கை துவங்கியுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கும் “யானை“ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்கரையோர பகுதிகளில் நடைபெற்றது. இதையடுத்து படம் தற்போது இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளதாகவும் அதேநேரத்தில் நடிகர் அருண்விஜய் தனது பாகத்திற்கான டப்பிங்கை நேற்று துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் கிறிஸ்துவமஸ், புத்தாண்டை ஒட்டி “யானை“ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு, வரும் ஏப்ரல் மாதத்தில் படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகை பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கும் “யானை“ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் “பார்டர்“, “பாக்ஸர்“, “அக்னிசிறகுகள்“, ஓ மை காட்“, மாஃபியா“ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.