close
Choose your channels

தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் இணைந்த சூப்பர்ஹிட் பட நடிகை!

Sunday, December 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் மேலும் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் மேனன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.



ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை அதிதி பாலன் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’அருவி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அதிதி பாலன் இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. .

‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’ ’பள்ளிக்கூடம்’ உள்பட பல காலத்தால் அழியாத திரைப்படங்களை இயக்கிய தங்கர்பச்சானின் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் நடித்த ’டக்கு முக்கு திக்கி தாளம்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.