close
Choose your channels

அஜித், சிம்பு இயக்குனரின் இயக்கத்தில் ஆர்யா

Sunday, January 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க', 'யட்சன்', மற்றும் 'இஞ்சி இடுப்பழகி' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீசில் ஹிட்டாக தவறியது. புறம்போக்கு படத்திற்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் வசூலில் திருப்தியில்லை. அதேபோல் 'இஞ்சி இடுப்பழகி' நல்ல விமர்சனத்தை பெற்றபோதிலும் மழை, வெள்ளம் காரணமாக வசூல் பாதித்தது.

இந்நிலையில் ஆர்யாவுக்கு இவ்வருடம் கைகொடுக்க உள்ள ஒரே படம் 'பெங்களூர் நாட்கள்' மட்டுமே. ஆர்யாவின் பல படங்கள் இரண்டு நாயகர்கள் படமாக இருப்பதால் அவருடைய திறமை வெளிப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஆர்யா மீண்டும் ஒரு இரண்டு நாயகர் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'வந்தா மல' என்ற படத்திற்கு இசையமைத்த சாம் டி.ராஜ் என்பவர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யாவுடன் நடிக்கவுள்ள இன்னொரு நாயகர் இயக்குனர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை துரை என்பவர் இயக்கவுள்ளார். இவர் அஜீத் நடித்த முகவரி, சிம்பு நடித்த தொட்டி ஜெயா உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.