close
Choose your channels

ஆர்யா அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்றும் ’கேப்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான ’கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரே ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.