close
Choose your channels

நெல்சனின் 'தலைவர் 169' படத்தின் கதை இதுதானா?

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ ’டாக்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடத்தல் சம்பந்தப்பட்ட டார்க் காமெடி கதை என்பது தெரிந்ததே. அதேபோல் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படமும் மால் ஒன்றில் இருக்கும் பொதுமக்கள் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்திருக்கும் கதை என்பதும் ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் ’தலைவர் 169’ திரைப்படமும் ஒரு கடத்தல் கதைதான் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மகளை கடத்திய தீவிரவாத கும்பலை ரஜினிகாந்த் கண்டுபிடிப்பதுதான் கதையாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

நெல்சனின் டார்க் காமெடி கடத்தல் கதைதான் ‘தலைவர் 169’ படத்திலும் தொடருமா? நெல்சன் படத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி ஆகியோர் இந்த இடம் பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.