close
Choose your channels

பெங்களூர் நாட்கள் டீசர் வெளியாகும் தேதி-நேரம்

Saturday, January 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்திற்கு 'பெங்களூர் நாட்கள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை சரியாக 5.40 மணிக்கு இணையதளங்களில் வெளியாகவுள்ளது. கேரளாவில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த படம் தமிழிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஆர்யா நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாபிசிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, ராய்லட்சுமி, பார்வதி, சமந்தா, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிவிபி சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை பாஸ்கர் இயக்கி வருகிறார். பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.