close
Choose your channels

சூப்பர்ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் இணையும் புதிய ஜோடி

Wednesday, August 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் ரொமான்ஸ் திரைப்படம் 'நின்னுக்கோரி'. இந்த திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது

இந்த படத்தின் தமிழ் ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை தமிழ் காஸ்மோ கிரன் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது

தெலுங்கில் நானி மற்றும் நிவேதா தாமஸ் நடித்த கேரக்டரில் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் ஆதி நடித்த கேரக்டரில் அவரே நடிப்பார் என்று கூறப்படுகிறது

மேலும், தெலுங்கில் நடிகை வித்யூராமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் தமிழிலும் அவரே இருப்பதாக தெரிகிறது. இந்த தகவலை வித்யூராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.