close
Choose your channels

மகனின் முகத்தை முதல்முறையாக காட்டிய அட்லி.. க்யூட் புகைப்படம் வைரல்..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லி தனது மகனின் முகத்தை முதன்முதலாக காட்டும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இந்த தம்பதிகளுக்கு இந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி மகன் பிறந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தங்கள் மகன் புகைப்படங்களை அட்லி மற்றும் பிரியா அட்லி தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தாலும் முதல் முறையாக அட்லி தனது மகனின் முகத்தை காண்பித்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ’ஜவான்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.