close
Choose your channels

பிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: பிரமுகர்கள் இரங்கல்!

Sunday, May 15, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரு சைமன்ட்ஸ் சற்றுமுன் கார் விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்தவரான ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் .

ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற போது அந்த அணியில் ஆன்ட்ரூ சைமன்ஸ் இருந்தார் என்பதும் உலக கோப்பையை வெல்ல அவரது பங்களிப்பு மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சென்ற கார் இன்று திடீரென விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம் குறித்த தகவல் தெரிந்ததும் சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.