close
Choose your channels

'அயலி' படத்தின் அம்மா நடிகையா இவர்?  வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘அயலி’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் அரிதாக வரும் வித்தியாசமான கதைய அம்சம் கொண்ட படங்களில் ஒன்று ‘அயலி’ என்பதும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை ஏற்படுத்திய இந்த படம் வசூலையும் வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் சமூகத்தின் மூட பழக்கவழக்கங்கள், அந்த நம்பிக்கைக்கு எதிராக அந்த பெண் நடத்தும் போராட்டம், பெண்களின் கல்வி ஆகியவை குறித்து மிக அருமையாக இந்த படம் பேசியிருந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கேரக்டரில் நடித்திருந்த சிறுமியின் அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை அனுமோல். மலையாள நடிகையான இவர் ’சூரன்’ ’திலகர்’ ’ஒருநாள் இரவில்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அனுமோலின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அயலி’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையா இவர்? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.