close
Choose your channels

டேஞ்சர் ஜோனில் 4 பேர்: நாளை வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் யார்?

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இவர்களில் நான்கு பேர் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வருமே கிட்டத்தட்ட சம அளவில் வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நால்வரில் மணிகண்டன் குறைவான வாக்குகளை பெற்று இருப்பதால் அவர் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியின் கமல்ஹாசன் எபிசோடு படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் நாளை இரவு அனேகமாக இந்த நால்வரில் வெளியேறுவது யார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.