close
Choose your channels

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்பதும் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

வடிவேலுவுடன் இந்த படத்தில் ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லே, முனிஷ்காந்த், விக்னேஷ்காந்த், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இணைந்துள்ளார். அவர்தான் ஷிவானி நாராயணன் .

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள ஷிவானி நாராயணன், ‘லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும்நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளேன். நடிப்புலக மேதை வடிவேலுவுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘விக்ரம்’, பொன்ராம்-விஜய்சேதுபதி படம், ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷங்க’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.