close
Choose your channels

முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சிகள்: 'பிக்பாஸ்' போட்டியாளர் உற்சாகம்..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர் ஜனனி முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சியில் நடித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் மற்றும் ஜனனி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சிகள் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து ஜனனிக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறி வருவதாகவும் ஜனனி உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வெளியான பிறகு ஜனனிக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos