close
Choose your channels

அருண் விஜய்யின் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம்.. பூஜை புகைப்படங்கள்..!

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது திரைப்படம் குறித்த தகவல் இன்று காலை வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் 36 வது படத்தை ’மான் கராத்தே’ ’கெத்து’ படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்க உள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக சித்தி இத்லானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாகவும் வெளியான தகவலை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் உள்ளார். இதையடுத்து அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பூஜையை பூஜையில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் முதல் ஷாட்டையும் தொடங்கி வைத்துள்ளார்.

அருண் விஜய்யின் 36-வது திரைப்படத்தில் தான் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ள பாலாஜி முருகதாஸ் பூஜை குறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.