close
Choose your channels

தர்ஷனுக்கு முடிசூட்டு விழா! இறுதிப்போட்டிக்கு முன்னரே வெற்றி விழாவா?

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த மூன்றாவது சீஸனில் தர்ஷன், பிக்பாஸ் டைட்டில் கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெற்றி பெறும் முன்னரே தர்ஷனுக்கு இன்று பிக்பாஸ் வீட்டில் முடிசூட்டும் விழா நடைபெறுகிறது. ஆம் இன்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு மன்னர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது

மன்னர் தர்ஷனுக்கு தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் லாஸ்லியா மற்றும் முகின் செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இதனையடுத்து இருவரும் பணிவிடைகளை செய்கின்றனர். மேலும் மன்னரின் பெருமைகளை சாண்டி அறிவிக்க வேண்டுமென குறிப்பு தரப்பட, உடனே சாண்டி, ‘ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ குலோத்துங்க’ என்று மன்னரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார்

அதேபோல் கவின் மட்டும் ஷெரின், மன்னர் தூரதேசம் செல்லும் போது அவரை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிட, இருவரும் தர்ஷனை தூக்கிக் கொண்டு செல்கின்றனர். காமெடியாக இருக்கும் இந்த டாஸ்க் போட்டியாளர்கள் மட்டுமன்றி பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் ஆகியோர் இந்த டாஸ்க் ரசித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.