close
Choose your channels

பாலாஜிக்கு சல்யூட் அடித்த ஆரி: 'விக்ரம் வேதா' பின்னணியில் ஒரு மாஸ் காட்சி!

Friday, January 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஆரியும் பாலாஜியும் அடிக்கடி சண்டை போடுவதாகவும், அதனால் தான் ஒட்டுமொத்த கேமே பாதிக்கப்பட்டதாகவும் தாங்களும் பாதிக்கப்பட்டதாகவும் ஒருசில போட்டியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக ரியோ சமீபத்தில் கூறியபோது ஆரி மற்றும் பாலாஜியின் சண்டையால் மற்றவர்கள் டிஸ்டர்ப் ஆவதாக தெரிவித்திருந்தார்.

அதனால் தான் வாக்கியம் டாஸ்க்கிலும் ஆரி, பாலாஜியையே பெரும்பாலானோர் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பேச வந்த பாலாஜி, ‘இந்த கேம் எப்படி போய்க்கொண்டு இருக்கின்றது என்றால் எனக்கும் ஆரிக்கும் பிரச்சனை, அதனால் எங்கள் இரண்டு பேர்களால் எல்லாருக்கும் பிரச்சனை என்று கேம் போய் கொண்டு இருக்கின்றது. வழக்கம்போல் நானும் அவரும் தான் இந்த வீட்டில் கெட்டவர்கள் என்பது அந்த கட்-அவுட்டை பார்த்தாலே தெரிகிறது.

ஒருசில நிகழ்வுகளை மட்டும் எடுத்து கொண்டு இந்த இடத்தில் இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வது போல் உள்ளது. இந்த சேஃப் கேம் என்பதை நானும் விளையாடவில்லை, கண்டிப்பாக அவரும் விளையாடவில்லை. இங்க சேஃப் கேம் விளையாடதது தான் நிறைய பேருக்கு இந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நானும் ஒருத்தன் என்று பாலாஜி ஆவேசமாக கூறியதும், அவருக்கு ஆரி சல்யூட் அடித்து பாராட்டு தெரிவித்தார்.

பாலாஜியின் இந்த ஆணித்தரமான பேச்சு ரியோ முகத்தை இறுக செய்தது என்பதும் ரம்யாவை தலைகுனிய வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைவிட ‘விக்ரம் வேதா’ படத்தின் பின்னணி இசை இந்த புரமோ வீடியோவை மாஸ் ஆக்கியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.