close
Choose your channels

ஓப்பன் நாமினேஷன்: ரியோவை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் நிலையில் இதுவரை கன்பெக்சன் அறையில் நாமினேஷன் நடந்த நிலையில் இன்று முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது

இந்த ஓபன் நாமினேஷன் குறித்து கருத்து தெரிவித்த பாலாஜி ’இந்த ஓபன் நாமினேஷனுக்காகதான் நான் இதுவரை வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன் என்று கூறினார். இன்றைய நாமினேஷனில் ஆரி, ரம்யா, அனிதா, பாலாஜி ஆகியோர் ரியோவையும் அர்ச்சனா ஆரியையும் ரியோ பாலாஜியையும் நாமினேட் செய்தனர்.

பாலாஜியை நாமினேட் செய்த ரியோ, ‘மற்றவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று முடிவு செய்த பாலா, தன்னை அவர் மாற்றி கொண்டார். இந்த வீட்டில் இருக்கின்றவர்கள் மாறவே கூடாது என்று கூறிய நிலையில் தன்னை மாற்றி கொண்டதால் பாலாவை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார்

இதுகுறித்து பாலா கூறியபோது, ‘ஒரு விஷயம் தப்பு பண்ணும்போது அது நமக்கு தெரியும்போது அதை ஏற்று கொள்கிறோம். ஒரு கருத்தை தவறாக புரிந்து கொண்டு அதற்கு ஒரு தவறான விளக்கமும் கொடுப்பதால் ரியோவை நான் நாமினேட்செய்கிறேன் என்று கூறுகிறார் மொத்தத்தில் இந்த வாரம் ரியோவை ஹவுஸ்மேட் டார்கெட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அர்ச்சனா குரூப்பில் உள்ள ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறிய நிலையில் இந்த வாரம் ரியோ வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.