close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: அட்டகாசமான புரமோ வீடியோ!

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் 4 சீசன்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் லோகோ வீடியோ வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் மணமகளை வரவேற்பது போன்றும், ஆரம்பத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த அக்கறையுடன் மணமக்களை கவனித்துக் கொள்வது போன்றும், நேரம் ஆக ஆக திரு மணமக்களின் வீட்டார்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது போன்றுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது

அதே போல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாகவும் போகப்போக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை செய்வதை மறைமுகமாக இந்த புரோமோ விடியோ குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆயிரம் பொருத்தம் பார்த்து நடக்கும் கல்யாண வீட்டிலேயே இவ்வளவு கலாட்டா இருக்கத்தான் செய்யும், இங்கேயே இப்படின்னா.... இங்க வீடும் பெரிசு, கலாட்டாவும் பெரிசு என்ற கமல் வசனத்துடன் இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது. அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.