close
Choose your channels

பிக்பாஸ் 6வது சீசனின் முதல் எலிமினேஷன் இவர் தான்: தொடரும் செண்டிமெண்ட்!

Saturday, October 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் முதல் எலிமினேஷனின் நாமினேஷன் பட்டியலில் உள்ள 12 பேர் குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஷெரினா, ஷிவின், விஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி ஆகிய நான்கு பேர் குறைவான வாக்குகள் பெற்று இருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த வாரத்தில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்ற சாந்தி எலிமினேட் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் அந்த சீசனில் உள்ள வயதான போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அனுயா, மமதி, பாத்திமா பாபு, ரேகா மற்றும் நாடியா ஆகியோர் கடந்த ஐந்து சீசன்களில் முதலாவதாக வெளியேற்றப்பட்ட நிலையில் அதே செண்டிமெண்ட்டின்படி இந்த சீசனின் வயதானவர் என்று கருதப்படும் சாந்தி வெளியேற்றப்பட்டு உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.