close
Choose your channels

ஷாலினி அஜித், ஆத்விக் உடன் பாலிவுட் பிரபலத்தின் எதிர்பாராத சந்திப்பு.. க்யூட் வீடியோ..!

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் ஆகிய இருவரையும் பாலிவுட் பிரபலம் ஒருவர் எதிர்பாராமல் சந்தித்த க்யூட் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஷாலினி அஜீத் தனது மகன் ஆத்விக் உடன் சென்னையின் எப்சி கால்பந்து அணி கலந்து கொண்ட கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார் என்பதை பார்த்தோம். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வந்தது. ஐஎஸ்எல் என்று சொல்லப்படும் கால்பந்து தொடர் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் ஷாலினி பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கால்பந்து போட்டியை தனது மகனுடன் ஷாலினி அஜித் பார்த்து ரசித்து கொண்டிருந்த நிலையில் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் பிரமுகர் அபிஷேக்பச்சன் திடீரென ஷாலினியிடம் வந்து நலம் விசாரித்தார். மேலும் அவரது மகனையும் அவர் வாழ்த்தினார். இது குறித்த க்யூட் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்றும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.