close
Choose your channels

சென்னையில் நடந்த செம டின்னர்: போனிகபூருடன் கலந்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போனிகபூர் தயாரித்த அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது புரமோஷனுக்காக சென்னை வந்துள்ள போனிகபூர் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட டின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போனிகபூருடன் பல நடிகைகள் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த டின்னரில் நடிகைகள் ராதிகா, த்ரிஷா, குஷ்பு, ஷோபனா, ரம்யா கிருஷ்ணன், கவுதம் மேனன், லிசி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘ஏகப்பட்ட இனிமையான அனுபவங்கள், நல்ல நட்புகள், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அருமையான விஷயங்கள், இந்த டின்னருக்கு ஏற்பாடு செய்த லிசிக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகை த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த டின்னர் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பதும் அவை வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos