close
Choose your channels

கேமிராவின் மொழியை புரிந்து கொண்டவர் நயன்தாரா: பிரபல ஒளிப்பதிவாளர் பாராட்டு

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்துள்ள நிலையில் வரும் 30ஆம் தேதி அவர் நடித்த மற்றொரு படமான 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் வசூலை குவித்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் அவர்கள் நயன்தாரா இந்த படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு குறித்து புகழ்ந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “நயன்தாரா வெறும் மேக்கப் போட்டுக்கொண்டு மட்டும் லென்ஸ் முன் நிற்கவில்லை. கேமராவின் மொழியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப சரியாகத் தன்னை வெளிப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்” என ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் பாராட்டியுள்ளார்

கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே' படத்தில் அறிமுகமான ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஏற்கனவே நயன்தாரா நடித்த 'கஜினி, 'மாஸ்', 'இருமுகன்' உள்பட பல வெற்றிப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.