close
Choose your channels

'டார்லிங் 2' நாயகியுடன் இணையும் புதுமாப்பிள்ளை ஹீரோ

Monday, November 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகர் சந்திரன், தற்போது அபிராமி ராமநாதன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்திரனுக்கு ஜோடியாக 'டார்லிங் 2' படத்தில் நாயகியாக நடித்துள்ள மாயா இந்த படத்தில் நடிக்கவுள்ளார். ஆர்.கே இயக்கும் இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவும், சி.சத்யா இசையமைக்கவும் உள்ளார். வரும் டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் ஒரு சீரியஸான சமூக கருத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.