close
Choose your channels

எனக்கான விடுதலையை நான் தான் போராடி வாங்கணும்: சேரனின் 'தமிழ்க்குடிமகன்' டீசர்

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தின் டீசர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கீழ் சாதியில் பிறந்தவர்கள் படித்து நல்ல வேலையில் இருந்தாலும் அவர்களுக்கு எந்தவிதமான மரியாதை இந்த சமூகத்தில் கிடைக்கிறது என்பதை குறிப்பிடும் வகையில் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட படம்தான் ‘தமிழ்க்குடிமகன்’ என இந்த படத்தின் டீசரில் இருந்து தெரிய வைக்கிறது.

வழக்கம்போல் சேரன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் இசையில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில், கார்த்திக் ராம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ’மாநாடு’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடொக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.