close
Choose your channels

தல அஜித்துடன் இணைந்த இயக்குனர் சேரன்

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இன்னும் ஒருசில மணி நேரங்களே இருக்கும் நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித் ரசிகர்களுக்கு தல தரிசனம் திரையில் கிடைக்கவுள்ளது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' திரைப்படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் சேரன் இயக்கி வரும் 'திருமணம்' டிரைலர் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதனை இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:

விஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் 'திருமணம்' திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.. ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள். என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.