close
Choose your channels

வைரமுத்துவை சந்தித்த விஜய் டிவி பிரபலம்.. சின்மயி கமெண்ட் என்ன தெரியுமா?

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்ததாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு பாடகி சின்மயி கொடுத்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’ராஜா ராணி 2; என்ற சீரியலில் நடித்தவரும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவருமான விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை சந்தித்து உள்ளார்.

இந்த சந்திப்பின்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் ஒன்றில் விஜே அர்ச்சனாவின் தலையில் கை வைத்து வைரமுத்து ஆசீர்வதிப்பது போல உள்ளது.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் ஒருசில நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் அளித்த பாடகி சின்மயி, ‘ஆரம்பத்தில் இது போலத்தான் அனைத்தும் இருக்கும் என்றும், தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள் என்றும், அவரை சந்திக்கும் போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றும், அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கமெண்ட்டை அர்ச்சனா டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் ஒரு சிலர் இந்த கமெண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos