close
Choose your channels

விக்ரம்-துருவ் விக்ரம் சென்ற விமானத்தில் திடீர் பிரச்சனை: அதன்பின் என்ன ஆனது?

Monday, August 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துவரும் ’சியான் 60’ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்ற விமானத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ’சியான் 60’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக டார்ஜிலிங் செல்ல படக்குழுவினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் படக்குழுவினர் 60 பேர் டார்ஜிலிங் புறப்பட்டனர்.

ஆனால் ’சியான் 60’ குழுவினர் சென்ற விமானம் கிளம்பிய 45 நிமிடத்தில் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளதாக விமான ஓட்டிகள் அறிவித்துள்ளனர். விமானத்தில் சில டெக்னிகல் பிரச்சினை இருப்பதாகவும் அதனால் விமானம் டார்ஜிலிங் செல்லவில்லை என்றும் மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாகவும் அறிவித்ததை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சனிக்கிழமை மீண்டும் ’சியான் 60’ படக்குழுவினர் விமானம் மூலம் டார்ஜிலிங் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்தில் வாணி போஜன் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.