close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

Tuesday, January 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் பிரியங்கா இரண்டாவது இடத்தை பெற்றார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்காக ஹிந்தியில் பிக்பாஸ் ஓடிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அதே போல் தமிழிலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டது என்பது சமீபத்தில் வெளியான புரமோவில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் 5 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் டைட்டில் வின்னர்களை தவிர மீதி உள்ளவர்களில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பட்டியல் இதோ: வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.