close
Choose your channels

புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி நடிகை: இதற்கு முன் கார் வாங்கிய விஜய்டிவி பிரபலங்கள்!

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் நடிகர் நடிகையர்கள் புதிய கார் வாங்கி வரும் நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் புதிய கார் வாங்கியுள்ளார் .

விஜய் டிவியில் இணைந்துவிட்டாலே அவர்களின் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்ற வகையில் பல நடிகர், நடிகைகள் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும், திரையுலகிலும் பிரபலமாகி வருகின்றனர். ஏற்கனவே ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் கார் வாங்கினார் என்பதும் அதனை அடுத்து ஷிவானி நாராயணன், மணிமேகலை, தாடி பாலாஜி, உள்ளிட்டோரும் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரித்திகா புதிய கார் வாங்கியுள்ளார். கார் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு என்றும் அது தனக்கும் இருந்தது என்றும் இன்று அந்த கனவு நிறைவேறி உள்ளதாகவும் நடிகை ரித்திகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக நாம் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்றும் கடவுள் அருளும் கடும் உழைப்பும் இருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்றும் ரித்திகா பதிவு செய்துள்ளார். புதிய கார் வாங்கிய ரித்திகாவுக்கு கனி உள்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.